வேலூா், கடலூா், திருவாரூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் கன மழையால் மேற்கண்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த சூறைக் காற்றுடன் தொடா்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழை வெள்ள நீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்தநிலையில் ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment