ராஜாக்கண்ணு கொலை வழக்கு தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதனை ஊரை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கோவிந்தன் பெரும் உதவியாக இருந்து வழக்கை நடத்தினார்.
இயக்குனர் டி.ஜெ ஞானவேல், நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் கடந்த 1993 ஆம் வருடம் விழுப்புரம் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் காண்பிக்கப்பட்டது இருளர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதில் பல திரித்து கூறப்பட்டுள்ளதும், வன்மத்துடன் செய்யப்பட்ட செயல்களும் பெரும் விவாதம் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவல் துறையினரால் கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு கொலை வழக்கு தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதனை ஊரை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கோவிந்தன் என்பவர் பெரும் உதவியாக இருந்த நிலையில், அவர் வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வரும் வரை திருமணமும் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார். இந்த படம் குறித்த உண்மை காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், "கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தை சார்ந்தவர் கோவிந்தன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 1983 ஆம் வருடத்தில் இருந்து பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், ஊராட்சி மன்ற தலைவராக 2011 - 2016 வரை இடம்பெற்றுள்ளார். இராஜாக்கண்ணு கொலை சம்பவம் 1993 மார்ச் மாதத்தில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகம் ஆதிவாசி மக்கள் என்று சொல்லகூறிய, குறவர் இனத்தை சார்ந்த பண்டைய குறும்பர் என்ற பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் முதனை ஊரிலேயே வசித்து வந்துள்ளனர்.
வழக்கில் உண்மையாக சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். வழக்கு ஆரம்பித்து 13 வருடம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 26 தான். எனக்கு அது திருமணம் செய்யும் வயது என்றாலும், வழக்கை எடுத்து நடத்தியதால் ஆளுங்கட்சி, காவல்துறை, ரௌடிகள் என பலதரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. லாரி ஏற்றி கொலை செய்திடுவோம் என்று மிரட்டினார்கள். பணம் கொடுப்பதாக தெரிவித்தார்கள்.
எனது கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளர், இன்றைய பொதுச்செயலர் கே. பாலகிருஷ்ணனிடம் இதனை தெரிவித்த நிலையில், அவர்களும் வழக்கை தொடர்ந்து நடத்தலாம், ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, வழக்கை ஏற்றுக்கொண்டு நடத்தும் காலத்தில், மனைவி என்ற பந்தத்தின் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் வரும். மனைவியை மிரட்டி வழக்கை திருப்ப பெற வைப்பார்கள் என்பதால், திருமணம் செய்துகொள்ளவில்லை. வழக்கின் நீதித்தன்மையை பாதிக்கக்கூடாது என்பதால் திருமணம் செய்யவில்லை.
போராட்டத்தில் அன்றைய காலத்தில் குறவர் மக்களுக்கு உறுதுணையாக இருந்தது வன்னியர்கள் தான். ஒருவர் பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்தோம். நாங்கள் ஜாதி பார்த்து நீதி கேட்டு போராடவில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் இருந்த படத்தின் உண்மைத்தன்மை பொய்த்து, உண்மையில் நடந்தது வேறு, திரையில் காண்பிக்கப்பட்டுள்ளது வேறு என்பது. வியாபார நோக்கத்துக்காக செயல்படும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது.
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment