Saturday, January 8, 2022

சிறு கவிதை துண்டுகள் - Kavithai


    கூடு சிறிதானால்

வானம் பெரிதே!
பறக்கத் தெரிந்துவிட்டால்
மண்ணில்..
நடப்பதற்கான நேரம் சிறிதே!
சிலையாகிப் போனாலும்
வன்மத்தின் எதிர்ப்பு
விழுகிறதே?!
அடடா..
அவன் "அது" அல்லவோ ?!
உயிர்ப்பின் நீட்சி
பொன்னேரிக் கரை மேவி
நீள்கிறதே...
எது நடந்தது
என்பதில் அல்ல
நடந்ததை எப்படி
நகர்த்தப் போகிறோம்
என்பதில்தான்
நமது இருப்பும் நிலைப்பும்...
தளைகள் களவாடிய
விளை நிலத்தில்
ஒரு கிழவன்
கால் பதித்தான்
சிலையால் மேவிய
வலைகள் அறுபட
பகுத்தறி வாள்
ஏர் பிடித்தவன்
வாழ்வெல்லாம்
நடையாய் நடை நடந்து
சுயமரியாதை உயிர்பெற
விதையாய் விதை விதைத்தான்
அறிவோமே..
கடவுள்
இல்லை இல்லை
என்றவன்
இறப்பைத் துறந்து
வாழ்கின்றான்
உலகம்
ஆயிரமாயிரம் முறை
சூழன்றாலும்
அவன் பிறக்காத
நாளில்லை
இம்மண்ணில்
பிறந்துவிட்டு
அறியார் யார் ?!
பெரியார்..
உன்னில் என்னில்...
நொடிகளுக்கு மத்தியில்
ஊழிச் சுமைகளைத்
தாங்கும்
பொழுதுகளின் தகதகப்பில்
மகுடங்கள் ஜொலிக்கின்றன

இருப்பது இல்லை என்ற
எண்ணம் வந்தால்
இல்லாதது இருப்பதாய்த்
தோன்றும்...
ஓ! இக்கரைக்கு அக்கரை
பச்சையோ ?!..
இருக்கலாம்
அக்கறையில்லா இக்கரைக்கு
அக்கரை சக்கரை தரலாம்
குக்கரை வை
பொங்கலோ பொங்கல்..

தமிழ் கவிதை - Tamizh Kavithai

 காணொளி காண வழி இல்லை

விழியிலும் ஒளி விழவில்லை
வானொலி கேட்டு வாழ்கின்றோம்
ஒலி வழி ஒளியை உணர்கின்றோம்.
முகம் பூசிய முகப் பொடியும்
அளவு தெரியா அளவில்
பூசிக்கொள்வோம்.
கைவீசி நடக்காமல் -கையோடு
குச்சி வீசி நடையிடுவோம்.
துணையும் தினம் துணையிருப்பாள்
எனையும் தினம் பிரிந்திருப்பாள்
ரயில் சப்தம் மேள ஒளி
அதில் புல்லாங்குழலோ தனி ஒலி.
ஒலி ஒன்றே உகமென்று
இருள் உள்ளே வெளிச்சம் தேடும்
கருவறை கருவோ நாங்கள்.

Gold Price in India

  Gold Price in India Gold has over the years been a perfect hedge against inflation. Investors are increasingly looking at gold as an impor...